Admin-message எமது தளத்துக்கு வருகை தரும் உங்கள் அனைவரையும் அன்புடன் வரவேற்கிறோம் உங்கள் வருகையை நினைவூட்ட இங்குள்ள Facebook பகுதியில் உள்ள Like ஐ கிளிக் பண்ணுமாறுஅன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.** உங்கள் நண்பர்களுக்கும் அறிமுகம் செய்யுங்கள் என்றும் முன்னிலை உங்கள் அபிமானத்துடன் **உள்நாட்டு,வெளிநாட்டு செய்திகளை உங்கள் கைத்தொலைபேசிமூலம் பெற்றுக் கொள்ள இலங்கையில் உள்ளவர்கள் - Follow <இடைவளி> Arankamnews என டைப் செய்து 40404க்கு MOBITEL,DIAOLOG, ETISALAT airtel,hutch அனுப்புங்கள்,*** உங்கள் செய்திகளை நீங்களும் அனுப்பலாம் செய்திகள் விளம்பரங்கள் அனைத்தையும் அனுப்ப வேண்டிய Email:Arankamnews@gmail.com SMS 0779073696 - call: 0779073696 Admin-message
Headlines
Admin-message
Sekar_Swiss SivaTravel Sekar_Swiss Sekar_Swiss

யார் என்ன சொன்னாலும் இவ்வருடத்துக்குள் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவோம்

Written By We Are Anonymous on Thursday, March 3, 2016 | Thursday, March 03, 2016


யார் என்ன சொன்னாலும் இவ்வருடத்துக்குள் எல்லை நிர்ணயப் பணி முடிவடைந்ததும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நாங்கள் நடத்தியே தீருவோம் என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று(03) காலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்ற அமைச்சில் இடம்பெற்ற விஷேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் கூறுகையில்,

கடந்த மூன்று மாத காலத்துக்குள் எல்லை நிர்ணயம் தொடர்பான பணிகள் மூன்று மாவட்டங்களில் மாத்திரம் நிரைவடைந்துள்ளதாகவும் எல்லை நிர்ணயப் பணிகள் நிறைவடைந்ததும் நங்கள் உடனடியாக தேர்தலை நடத்துவோம் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

தேர்தலை ஒத்திப்போட வேண்டிய அவசியம் எவ்வகையிலும் எமக்கில்லை. அசோக்க பீரிஸ் தலைமையிலான எல்லை நிர்ணயம் தொடர்பில் மக்களின் முறைப்பாடுகள் மற்றும் மேன்முறையீடுகளை கண்டறியும் குழு தமது பணியை நிறைவு செய்யாமல் எம்மால் தேர்தலை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.

எல்லை நிர்ணயம் என்பது மிகவும் கடினமான பணியாகும். இந்த நாட்டில் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் ஆகிய மூவின மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் அனைவருக்கும் சமமான முறையில் எல்லை நிர்ணயப் பணியை மேற்கொள்ளவுள்ளதால் இந்த காலதாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் செயற்பாடுகளில் காலதாமத்தை வைத்துத்தான் அமைச்சர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன நேற்று இவ்வருடத்தில் எந்தவித தேர்தலும் நடைபெறாது என கூறினார்.

உள்ளூராட்சி தேர்தலை மார்ச் 31ம் திகதிக்கு முன்னர் நடத்தாவிட்டால் வீதிக்கு இறங்கி போராடுவோம் என கூறி ஒன்றிணைந்த எதிர்கட்சி மக்களை பிழையாக வழிநடத்த எத்தனிக்கின்றது. இதனை எங்களால் ஏற்க முடியாது. யார் என்ன சென்னாலும் எல்லை நிர்ணயப் பணிகளை முடிவு செய்யாமல் புதிய முறையில் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த முடியாது என அவர் குறிப்பிட்டார்.


Share this article :




முக்கிய குறிப்பு: ரஜரட்ட மீடியா இணையதளத்தில் செய்திகளுக்கும் கட்டுரைகளுக்கும் வாசகர்கள் பதிவு செய்யும் கருத்துக்கள் ஆசிரியர் குழுவால் தணிக்கை செய்யப்பட்டு பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு ரஜரட்ட மீடியா நிர்வாகமோ அல்லது அதன் ஆசிரியர் குழுவோ எந்தவிதத்திலும் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி வாசகர்களை கேட்டுக்கொள்கிறோம். அத்துடன் உங்களது செய்திகளை Rajaratanews1st@gmail.com என்ற ஈமைல் முகவரிக்கு அனுப்பி வையுங்கள்


0 கருத்துகள்:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

உலக செய்திகள்

செய்திகளை அனுப்ப

Smiley face

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

செய்திகளை அனுப்ப

 
Support : Website | Mohamed Hasni | Mohamed Solution
Proudly powered by Rajarata Media
Copyright © 2016. BBC News plus - All Rights Reserved